search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போபர்ஸ் வழக்கு"

    போபர்ஸ் வழக்கு தொடர்பாக டெல்லி தலைமை மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் தங்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை சி.பி.ஐ. நேற்று வாபஸ் பெற்றது.
    புதுடெல்லி:

    மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது, 1986-ம் ஆண்டு சுவீடன் நாட்டில் உள்ள போபர்ஸ் நிறுவனத்திடம் பீரங்கிகளை வாங்க ஒப்பந்தம் செய்ததில் ரூ.64 கோடி ஊழல் நடந்ததாக வந்த புகாரின் பேரில் சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கை விசாரித்த டெல்லி ஐகோர்ட்டு, குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து 2005-ம் ஆண்டு தீர்ப்பு கூறியது. இதனிடையே சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. மேல்முறையீடு செய்தது. 13 ஆண்டுகள் தாமதமாக மேல்முறையீடு செய்து இருப்பதாக கூறி சி.பி.ஐ. மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

    இந்நிலையில், போபர்ஸ் ஆயுத பேரம் தொடர்பாக புதிய ஆதாரங்கள் கிடைத்து இருப்பதாகவும், இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கோரி டெல்லி தலைமை மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சி.பி.ஐ. கடந்த ஆண்டு மனுதாக்கல் செய்தது. இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க சி.பி.ஐ. அனுமதி கோருவது ஏன்? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். இதையடுத்து தங்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை சி.பி.ஐ. நேற்று வாபஸ் பெற்றது.
    ×